மண்மேடு சரிந்து விழுந்து பாடசாலை மாணவன் மரணம்!

ஒக்டோபர் 23, 2023 - 12:22
மண்மேடு சரிந்து விழுந்து பாடசாலை மாணவன் மரணம்!

மாத்தறை - கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தின் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ள இந்த அனர்த்தத்தில், தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவரே உயிரிழந்துள்ளார்.

மண் மேடு சரிந்துள்ளமையால் குறித்த பகுதிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவனின் சடலம், ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!