முன்னாள் சட்ட மா அதிபரை கைதுசெய்யப் போவதில்லை என அறிவிப்பு

தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்துக்காக அவரைக் கைது செய்யப் போவதில்லை என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(22) உறுதியளித்துள்ளார்.

ஜுன் 22, 2023 - 16:00
முன்னாள் சட்ட மா அதிபரை கைதுசெய்யப் போவதில்லை என அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்துக்காக அவரைக் கைது செய்யப் போவதில்லை என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(22) உறுதியளித்துள்ளார்.

தம்மைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா  தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே சட்ட மா அதிபர் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!