ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு சக்திவாய்ந்த "ஊழல் எதிர்ப்பு அமைப்பு"
வழமையாக ஆட்சிக்கு வந்த பின்னர் டீல் போடுவதும், திருடர்கள், மோசடிக்காரர்களை கையாள்வதும்தான் நடப்பதாகவும், அரசியல்வாதிகள் திருடர்கள், கொள்ளையர்களுடன் கையாளும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

ஊழலை ஒழிப்பதற்காக அரசியலமைப்பின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்ட வலுவான 'ஊழல் ஒழிப்பு முகவர்' அமைப்பொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வழமையாக ஆட்சிக்கு வந்த பின்னர் டீல் போடுவதும், திருடர்கள், மோசடிக்காரர்களை கையாள்வதும்தான் நடப்பதாகவும், அரசியல்வாதிகள் திருடர்கள், கொள்ளையர்களுடன் கையாளும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் பானம பிரதேசத்தில் வசிக்கும் 900 ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (14) ஆரம்பித்து வைத்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். (News21)