இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான புதிய வழி

இங்கு ஈரானிடம் இருந்து இலங்கை பெற்ற 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக தேயிலை முதலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஜுன் 25, 2023 - 11:15
இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான புதிய வழி

2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்க்கு பதிலாக இந்த நாட்டிலிருந்து தேயிலை பொருட்களை ஏற்றுமதி செய்ய இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம் செய்து, இந்த முறை வரும் ஜூலை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு ஈரானிடம் இருந்து இலங்கை பெற்ற 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக தேயிலை முதலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி மாதம் ஒன்றுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை ஈரானுக்கு 48 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பண்டமாற்று வர்த்தகம் அல்லது பண்டமாற்று முறையின் கீழ் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த தேயிலைக்கு, இலங்கையில் உள்ள தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை ரூபாயில் எண்ணெய் கூட்டுத்தாபனம் செலுத்தவுள்ளது.

மேலும், ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்கள் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு ரியால்களில் இது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!