சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 15, 2022 - 14:58
சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் நாட்டிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள்(106,500) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம்மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதிகமானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 108,510 என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 78,827 பிரித்தானிய பிரஜைகளும் 74,713 ரஷ்ய பிரஜைகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!