மண்மேடு சரிந்து இருவர் உயிரிழப்பு
மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தெய்யந்தர, பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் நேற்று (01) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெய்யந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.