மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகல்
தற்போதைய வெற்றிடத்திற்கு ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவரது இப்பதவி விலகலை உறுதிப்படுத்தியுள்ள நிதியமைச்சு, தற்போதைய வெற்றிடத்திற்கு ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.