வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
8 அடி 700 உஅ நீளமான கஞ்சா செடியியை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
8 அடி 700 உஅ நீளமான கஞ்சா செடியியை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியிலான போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கைகளில் 17.12.2023 முதல் 715 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் என கைதுசெய்யப்பட்ட சந்தேகபர்களில் 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
சந்தேகநபரிடமிருந்து 20 பேர் மேலதிக விசாரணைக்காக காவலில் எடுக்கப்படவுள்ளனர். 05 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 06 புனர்வாழ்வுக்கு வழி வகுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.