ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் - வெளியான தகவல்
ஜூன் மாத ஆரம்பத்தில் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் வரும். எனவே, ஜூலையில், பஸ் கட்டணம் கண்டிப்பாக, கணிசமான அளவு உயரும்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பஸ் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையில் நேற்று முன்தினம் (31) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"டீசல் விலையை கணிசமான அளவு குறைத்திருந்தால், பஸ் கட்டணத்தின் பலன் மக்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால், தற்போது பெட்ரோல் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத ஆரம்பத்தில் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் வரும். எனவே, ஜூலையில், பஸ் கட்டணம் கண்டிப்பாக, கணிசமான அளவு உயரும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.