இடைக்கால கிரிக்கெட் குழு இரத்து - அமைச்சர் அதிரடி

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழு இரத்து செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை இரத்து செய்யும் வர்த்தமானியில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கையெழுத்து போட்டு உள்ளார்.
ஐ.சி.சியினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் தளத்தில் கூறி உள்ளார்.
அத்துடன், இலங்கை கிரிக்கட் குறித்து கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கணக்காய்வு அறிக்கையை மேற்பார்வை செய்யுமாறு சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.