இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி

கொழும்பு - பிலியந்தலை வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Jan 27, 2023 - 08:00
இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி

கொழும்பு - பிலியந்தலை வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொல்பாகொட யக்கலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்திற்கான பிரேக் உடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் முன்பக்க வலது சக்கரத்தில் இளைஞன் சிக்கியுள்ளதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்