வத்திக்கான் வெளியுறவுத்துறை பேராயரை சந்தித்தார் ஜனாதிபதி
உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர், இன்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.

பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை பேராயர் இதன்போது மிகவும் பாராட்டினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு வத்திக்கான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், நாட்டிற்குள் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதன் மூலமும் இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான ஐம்பது ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் நாட்டிற்கு பல நன்மைகளைத் தந்துள்ளன என்று ஜனாதிபதி திசாநாயக்க இதன்போது பேராயரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.