கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க 8,000 பேருக்கு அனுமதி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் நடக்கவுள்ளது.

ஜனவரி 26, 2024 - 15:28
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க 8,000 பேருக்கு அனுமதி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க விம்பும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் நடக்கவுள்ளது.

இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பேரும் தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேரும் என மொத்தம் 8 ஆயிரம் பேர் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.

கச்சதீவு திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கான விண்ணப்பப் படிவத்தை நேற்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை பெற்றக்கொள்ள முடியும்.

இதனை, ராமேஸ்வரம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!