இந்த ஆண்டு இதுவரை 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் - 37 பேர் பலி
இந்த ஆண்டு இதுவரை 23 T-56 துப்பாக்கிகள் உட்பட 1165 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறி உள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 50 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை என தெரியவந்துள்ளது.
அவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 24 துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் 15 ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை 23 T-56 துப்பாக்கிகள் உட்பட 1165 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறி உள்ளார்.