24 மணித்தியாலத்தில் மேலும் 667 சந்தேக நபர்கள் கைது
போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 667 சந்தேக நபர்கள் இலங்கையின் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 191 கிராம் ஹெரோய்ன் மற்றும் 103 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.