2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் இறந்துள்ளன, வெளியான தகவல்

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜுலை 24, 2023 - 14:29
2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் இறந்துள்ளன, வெளியான தகவல்

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் கருத்துப்படி, கடந்த பத்தாண்டுகளில் ஒரு வருடத்தில் பதிவான அதிக யானை உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவாகும்.

இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை மனித செயற்பாட்டினால் ஏற்படுவதாக டாக்டர் ரவீந்திர காரியவசம் தெரிவித்தார்.

யானைகளின் எண்ணிக்கையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

இந்த நிலை தொடருமானால், இலங்கையில் காட்டு யானையைக் கண்டறிவது அரிதான நிகழ்வாகிவிடும் என கலாநிதி ரவீந்திர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!