மற்றுமொரு துப்பாக்கிச்சூடு; 41 வயதுடைய நபர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை கந்தே மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அம்பலாங்கொடை கந்தே மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
41 வயதுடைய நபரொருவர் தனது வீட்டின் முன் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
குறித்த நபர் தலையில் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்மிக்க நிரோஷன் என்ற உயிரிழந்த நபர் 2002ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வீரர் என தெரிவிக்கப்படுகிறது.