4 வயது அமெரிக்க சிறுமியை விடுவித்தது ஹமாஸ்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் 4 வயது சிறுமியின் அபிகெய்ல் ஈடன். இவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர். 

4 வயது அமெரிக்க சிறுமியை விடுவித்தது ஹமாஸ்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் பயங்ரகவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது, இவரது வீட்டிற்குள் நுழைந்து தந்தை மற்றும் தாயை சுட்டுக் கொன்றுள்ளனர்.அப்போது பக்கத்து வீட்டில் சென்று தஞ்சம் அடைந்துள்ளார் அபிகெய்ல் ஈடன். 

பக்கத்து வீட்டிற்குள்ளும் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த குடும்பத்துடன் இவரையும் சேர்த்து பிணைக்கைதிகளாக பிடித்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து மூன்று குழந்கைகள், குழந்தைகளின் தாய் மற்றும் ஈடன் ஆகிய ஐந்து பேரும் காணாமல் போனர். பின்னர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில் அபிகெய்ல் ஈடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT