குவைத்தில் நிர்கதியான 35 பேர் நாடு திரும்பினர்
விசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்ததாக 33 பெண்கள் மற்றும் 2 ஆண்களே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பு, நவ.30 (நியூஸ்21) - குவைத்தில் நிர்கதிக்குள்ளாகிய நிலையில் இருந்த 35 இலங்கை பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று(29) நாடு திரும்பியுள்ளனர்.
விசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்ததாக 33 பெண்கள் மற்றும் 2 ஆண்களே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: 7 நாடுகளுக்கு இலவச வீசா... உடனடியாக அமுல்! எவ்வாறு பெறுவது?
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குவைத அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.