இந்த வருடத்தில் 322 இந்திய மீனவர்கள் கைது
மிழக மீனவர்களின் 44 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 322 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
அத்துடன், தமிழக மீனவர்களின் 44 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறும், கைதான மீனவர்களை விடுவிக்குமாறும் தமிழகத்தின் பல பகுதிகளில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உரிய தீர்வை இந்திய மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என, தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.