9 வருடங்களில் 3000 காட்டு யானைகள் இறப்பு - 1,190 பேர் பலி!
கடந்த 9 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400ஐ கடந்துள்ளது.

கடந்த 9 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400ஐ கடந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த உயிரழப்புகள் பதிவானதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று இதனை தெரிவித்த அவர், இதுவரை 3,477 காட்டு யானைகள் இறந்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 ஆண்டுகளில் 1,190 பேர் பலியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.