அரச - தனியார் பஸ்கள் மோதி விபத்து - 30 பேர் காயம்
பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்
பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று (ஏப்ரல் 29) தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் தங்காலை மற்றும் பெலியத்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.