தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 30 பேர் பாதிப்பு

இதனையடுத்து நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜுன் 12, 2024 - 16:12
தொழிற்சாலையில் இரசாயன கசிவு; 30 பேர் பாதிப்பு

பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கலவை தயாரிக்கும் போது இரசாயனப் பொருளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு குழு தனிப்பட்ட சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!