வினோத விருந்துக்கு சென்ற 20-22 வயதுக்கு இடைப்பட்ட 27 பேர் கைது
சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 3 பேரிடம் ஹஷிஸ் போதைப்பொருளும், மேலும் மூன்று சந்தேக நபர்களிடம் போதை மாத்திரைகளும் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, காலி, கண்டி மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.