பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட 26 பேர் அதிரடி கைது

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

டிசம்பர் 13, 2025 - 10:55
டிசம்பர் 13, 2025 - 11:01
பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட 26 பேர் அதிரடி கைது

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 26 பேரைக் கைது செய்துள்ளனர். 

இந்தக் கைது நடவடிக்கை, இன்று (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 22 இளைஞர்களும் 4 யுவதிகளும் அடங்கினர். கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் 21 முதல் 26 வயதுக்குட்பட்ட யுவதிகள் ஆவர். 

அவர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். .

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இன்றைய தினம் தெல்தெனி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!