அரச வைத்தியசாலைகளில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம்
கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக அதன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று புதன்கிழமை (21) காலை 08 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மேற்கொண்டு வரும் தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

