துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆறு மாதங்களில் 23 பேர் பலி
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்தக் காலப்பகுதியில் 40 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவானதுடன் மேல் மற்றும் தென் மாகணங்களில் அதிகளவு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் நான்கு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவானதுடன், மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (News21)