செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் - அறிவிப்பு வெளியானது
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியாக 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்கள் 2024 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் நவம்பர் 17, 2024 இல் முடிவடைகிறது என்றும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஒரு மாதத்திற்குக் குறையாமலும், பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அரசியலமைப்பின் பிரிவு 31 (3) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நடத்தப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், 2024 ஆகஸ்டு 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தினமாகவும், ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை மேற்படி தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு பிரகடனப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியாக 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.