தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி காலை 09.30 மணிமுதல் மதியம் 12.15 மணிவரை நாடு தழுவிய ரீதியில் 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
09 செப்டம்பர் 2024 க்கு முன்னர் பரீட்சை விண்ணப்பதாரர்களின் விவரங்களில் திருத்தங்கள் கோரப்பட வேண்டும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை பெயர் பட்டியல்கள் கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic ஊடாக உரிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.