சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

மே 5, 2024 - 11:17
சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

மீள் திருத்தத்துக்கு 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதுடன், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை மாணவர்கள் பார்வையிட முடியும்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதுடன்,  452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மூன்று லட்சத்து 87,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சை எழுதுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விசேட பரீட்சை மய்யங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!