டெல்லியில் கொடூரம்: 20 வயது பெண் காதலனால் குத்திக்கொலை

குறித்த யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால் காதலன் அந்த யுவதியுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் பலமுறை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 14, 2025 - 06:28
டெல்லியில் கொடூரம்: 20 வயது பெண் காதலனால் குத்திக்கொலை

டெல்லியின் நந்த் நக்ரி பகுதியில், 20 வயதுடைய யுவதி, அவரது காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நந்த் நக்ரியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால் காதலன் அந்த யுவதியுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் பலமுறை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே குற்றவாளியின் குடும்பத்தினரிடம் யுவதியின் தந்தை முன்னதாக புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையில், குறித்த இளைஞரும் யுவதியும் ஒரே பகுதியில் வசித்துவந்தவர்கள் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களிடையே காதல் தொடர்பு இருந்தாக கூறப்படுகின்றது.

அண்மையில் அந்த யுவதி தமது காதலை தவிர்த்து விலகிச் செல்ல ஆரம்பித்ததே இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!