பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - இறக்குமதியாளர்கள்

செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கும் தட்டப்பாடு ஏற்படக் கூடும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஜுன் 16, 2022 - 10:20
ஜுன் 21, 2022 - 12:56
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - இறக்குமதியாளர்கள்

அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கு எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கும் தட்டப்பாடு ஏற்படக் கூடும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 6 ஆம் திகதி முதல் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது இதுவரை பயன்படுத்தப்பட்ட திறந்த கணக்கு அடிப்படையிலான முறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

அந்த முறைமை நிறுத்தப்பட்டதன் மூலம் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது டொலர் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!