துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுமி காயம்
துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னேரியா, கிரித்தலே பகுதியில் நேற்றிரவு 17 வயதுடைய சிறுமி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிரித்தலை பிரதேசத்தை சேர்ந்த சிறுமி, படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (News21)