காத்தான்குடி விபத்தில் 17 வயது மாணவன் உயிரிழப்பு
காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (27) இரவு கல்முனை - மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை - மட்டக்களப்பு வீதியில் நாவற்குடா பகுதியில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி வீதியில் வலப்புறம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த பொலன்னறுவை-சுங்காவில பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வேன் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.