கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

(news21.lk Colombo) அம்பதலை நீர் விநியோகத் தொகுதி பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (24) மாலை 5 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை (25) காலை 9 மணி வரையிலான 16 மணிநேரம் நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.