லண்டன் பூங்காவில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்
உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 4.30 மணியளவில், நோர்டோல்ட், பெல்வ்யூ பூங்காவில் சடலத்தை பார்த்த பொதுமக்கள் பொலிஸாரை அழைத்தனர்.

மேற்கு லண்டன் பூங்கா ஒன்றில் தீப்பற்றி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 4.30 மணியளவில், நோர்டோல்ட், பெல்வ்யூ பூங்காவில் சடலத்தை பார்த்த பொதுமக்கள் பொலிஸாரை அழைத்தனர்.
ஆண் என நம்பப்படும் சடலத்தை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார், இந்த மரணம் தொடர்பில் தற்போது எந்த விளக்கமும் அளிக்கமுடியாது என்றும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.