அகதிகளாக தனுஷ்கோடி சென்ற 15 இலங்கை தமிழர்கள்
பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் இவர்கள் வந்து இறங்கினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.
பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் இவர்கள் வந்து இறங்கினர்.
இதேவேளை, கடந்த மார்ச் முதல் இன்று (25) வரை 75 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.