மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு
நவகத்தேகம பிரதேசத்தில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவகத்தேகம பிரதேசத்தில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சார இணைப்பைப் பயன்படுத்தி சிறுமி மின்சார கருவியொன்றை பயன்படுத்த முயற்சித்ததாகவும், அதன் போது மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவகத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.