138 அதிபர்கள் இடமாற்றம் - வெளியான அறிவிப்பு
இந்த இடமாற்றங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடும் அதிபர்கள், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க முடியும்.

வடமேல் மாகாணத்தில் 138 அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
வடமேல் மாகாணத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிய 138 அதிபர்களை மே 20ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்ய மாகாண முதலமைச்சர் தீர்மானித்துள்ளார்.
இந்த இடமாற்றங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடும் அதிபர்கள், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்குமாறும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை தவிர வேறு எக்காரணம் கொண்டும் இடமாற்றங்கள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
முக்கிய இடமாற்றக் கொள்கைக்கு தற்போதைய ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய ஒப்புதல் அளித்துள்ளார். அந்த கொள்கைக்கு புறம்பாக இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவோ அல்லது இடைநிறுத்தப்படவோ மாட்டாது என்றும் அவர் கூறினார்.
கடந்த வருடம் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றத்தை அமுல்படுத்துவது முன்னாள் ஆளுநர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் நசீர் அஹமட் ஆகியோரால் தொடர்ச்சியாக இடைநிறுத்தப்பட்டு பல மாத கால தாமதத்தின் பின்னரே அதனை நடைமுறைப்படுத்த முடிந்தமை குறிப்பிடத்தக்கது.