நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மாயம்; மீட்பு பணிகள் முன்னெடுப்பு
இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இந்த சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோதரவத்தை வாவியில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) பிற்பகல் இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இந்த சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையின் சூழியோடிகளும் ஈடுபட்டுள்ளனர்.