பஸ் விபத்தில் 13 பேர் காயம்
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்ஓவிட்ட, கம்புராதெனிய பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கியும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணித்த இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.