சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு
நாட்டின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
24ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, கந்தானை மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளிலே நீர் விநியோகம் தடை நடைமுறைப்படுத்தப்படும் என சபை அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.