மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி - வெளியான தகவல்
வெலம்பொடை, கோவில்கந்தவில் உள்ள ஒரு வீட்டில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலம்பொடை, கோவில்கந்தவில் உள்ள ஒரு வீட்டில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை (மே 20) நடந்துள்ளது.
இறந்தவர் கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணையில், சிறுமி மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கண்டி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலம்பொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.