தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். 

ஆகஸ்ட் 24, 2024 - 10:57
தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். 

அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் இந்த மீனவர்கள் 11 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!