கண்டியில் 11 நாட்கள் இறைச்சி மற்றும் மதுபான கடைகளுக்கு பூட்டு
பெரஹரா வீதி பவனி வரும் 10ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி பெரஹரா தினம் வரை மதுபானக்கடைகள் மூடப்படும்.

எசல பெரஹராவை முன்னிட்டு நாளை (10) முதல் 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லை மற்றும் அதனைச் அண்மித்துள்ள பகுதிகளில் காணப்படும் மதுபானக் கடைகளை மூட கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பெரஹரா வீதி பவனி வரும் 10ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி பெரஹரா தினம் வரை மதுபானக்கடைகள் மூடப்படும்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் நட்சத்திர உணவகம் மற்றும் உணவகங்களில் மதுபானம் விற்பனை செய்ய மற்றும் மதுபானம் அருந்த அனுமதி வழங்க முடியாது எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டி நகர எல்லையிலுள்ள இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை இந்த காலப்பகுதியில் மூடுமாறு கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது.
கண்டி நகரத்தில் உள்ள யாசகர்கள் மற்றும் தெருநாய்களை அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் திருமதி இந்திகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.