கொழும்பு மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் வீடுகள்... விவரம் இதோ!

சுமார் 6,500 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.

டிசம்பர் 31, 2023 - 19:45
கொழும்பு மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் வீடுகள்... விவரம் இதோ!

கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2024 ஆம் ஆண்டு 10,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இவற்றில், சுமார் 6,500 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதற்காக 11 வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அவற்றில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் 06 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 14,611 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், 11,269 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!