நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவு; ஒருவர் பலி, 25 பேர் மாயம்

நேபாளத்தின் கிழக்கு பகுதியில், பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டன.

ஜுன் 18, 2023 - 13:09
நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவு; ஒருவர் பலி, 25 பேர் மாயம்

நேபாளத்தின் கிழக்கு பகுதியில், பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டன.

இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கார், பைக் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அவ்வப்போது ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில், மண்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இதுதவிர, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மக்களில் 25 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது என அந்நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!