தாக்குதல் தொடர்பாக 06 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

சக மாணவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்  கைது.

மே 7, 2025 - 11:04
தாக்குதல் தொடர்பாக 06 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

சக மாணவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 29 ஆம் திகதி  தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாகக் கூறி ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

மே 6 செவ்வாய்க்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் ஆஜரான நிலையில், அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாபிட்டிய மற்றும் கலங்குட்டிய ஆகிய இடங்களைச் சேர்ந்த  22, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.  (நியூஸ்21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!