வெறும் வயிற்றில் காலையில் டீ பருகுவது ஆபத்தை ஏற்படுத்துமா?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் அந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

நம்மில் பெரும்பாலானவர் காலையில் எழுந்தவுடன் முதலில் தேடுவது டீ அல்லது காபியைத்தான். இவற்றில் ஒன்றுடன் நாளைத் தொடங்கினால்தான் அவர்களுக்கு அந்த நாள் முழுமையடைந்ததாக தோன்றும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் அந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஏனெனில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- காலையில் வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றில் இருக்கும் அமிலங்களை தூண்டி செரிமானத்தை சீர்குலைக்கக்கூடும்.
- வெறும் வயிற்றில் டீ பருகும்போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு கடத்தப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
- தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுப்படுத்த டீ பருகி பருகுவார்கள். ஆனால் டீயில் காபின் இருப்பதால் எதிர்பார்க்கும் பலனை தராது.
- வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது செரிமான அமைப்புக்கு இடையூறை ஏற்படுத்தும். வாயு தொந்தரவையும் உண்டாக்கும்.
- காலையில் எழுந்தவுடன் டீ குடித்தால், நீரிழப்பை அதிகப்படுத்திவிடும்.
- தேநீரில் டானின் என்ற சேர்மம் உள்ளது. இது சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். மேலும் தேநீரில் உள்ள காபினும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை குறைத்துவிடும்.