வரவு - செலவுத் திட்டம் 2023 – இன்று 6 ஆம் நாள் விவாதம்
வரவு - செலவுத் திட்டம் 2023 -இன் இரண்டாம் வாசிப்பின் 6 ஆம் நாள் விவாதத்துக்கு நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியுள்ளது.

வரவு - செலவுத் திட்டம் 2023
வரவு - செலவுத் திட்டம் 2023 -இன் இரண்டாம் வாசிப்பின் 6 ஆம் நாள் விவாதத்துக்கு நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியுள்ளது.
வரவு - செலவுத் திட்டம் 2023 -இன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமானது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு - செலவுத் திட்டம் 2023-ஐ கடந்த திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் 13 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.